இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனைவிக்கோர் மடல்

முன்குறிப்பு: இப்பதிவை கர்த்தர் ஒருவேளை எனக்கென்று ஒரு பெண்ணை எனது விலா எலும்பாக ஏற்கனவே முன்குறித்து வைத்திருந்தாரானால் அப்படிப்பட்ட என்னுடைய துணையானவளுக்கு, நான் எழுதக்கூடிய ஒரு மனந்திறந்த மடலாக பதிவிடுகிறேன். மேலும், இனி திருமணம் ஆகப் போகிறவர்களுக்கும் இப்போது புதிதாக திருமணம் ஆனவர்களுக்கும் அவர்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டி இப்பதிவை  அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அன்புள்ள என் விலாவிற்கு, என்னால் நேசிக்கப்படப்போகும் பெண்மானும், அழகான வரையாடும் போலிருக்கப்போகும் என் இளவயதின் மனைவிக்கு, கர்த்தரின் நாமத்தினாலே ஸ்தோத்திரம். சற்றே சந்தேகமாய் தோன்றலாம் இளவயதின் மனைவி என்றால், அப்போது முதிர்வயதில் நான் மனைவியாயிருக்க மாட்டேனா என்று. அப்போது நீ எனக்கு நல்ல தோழியாகவோ அல்லது எனக்கு இரண்டாவது தாயாகவோ அல்லது குடும்பத்தார் அனைவருக்குமான தேவதையாகக் கூட இருக்கலாம். 'தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்' என்கிற வசனத்தின்படி நாம் தொடங்கப்போகும் வாழ்வுக்காக கிறிஸ்துவுக்கு கோடி நன்றிகள்.  'முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது' என்கிற வசனத்தின்பட...

எனது வேறுசில பதிவுகள்

படம்
என்னுடைய வேறுசில வலைப்பூக்களில் நான் இதற்கு முன்னரே பதிவிட்டிருந்த கிறிஸ்தவப் பதிவுகளின் மொத்தத் தொகுப்பாக இங்கு நான் அவைகளை, அவைகளின் உரலியினோடு(URL) சேர்த்து கொடுத்துள்ளேன். நேரமிருக்கும் பட்சத்தில் அவைகளையும் படித்துப்பார்த்து தங்களது கருத்தினை தெரிவியுங்கள், நன்றி.! நாம் நமது தேவனோடு நேரம் செலவளிக்காகாமல் இருக்கக்கூடாது, ஒவ்வொருநாளும் குறைந்தபட்சம் நமது முதல் செலவானது கர்த்தருக்காக கர்த்தரோடு நாம் செலவிடும் நேரமாகத்தான் இருக்கவேண்டும் என்பதை பற்றிய பதிவு.  இங்கே சொடுக்கவும்   நமக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையை, கர்த்தருக்குள் எவ்வாறு அவரது சித்தப்படி நாம் தெரிந்துகொள்ளலாம் அல்லது நாம் எவ்வாறு தெரிந்தெடுக்கலாம் என்பதை பற்றிய பதிவு. இங்கே சொடுக்கவும் என்னுடைய இருதயத்தின் வேண்டுதலாக, என்னுடைய விலா எலும்பிலிருந்து வந்தவளாக இருக்கும், வரப்போகும் என்னவளான குணசாலியான ஸ்திரீயினது தேவதை அம்சத்தை பற்றிய பதிவு. இங்கே சொடுக்கவும் காரணகர்த்தராக கர்த்தரையும், அவரது கிரியையை என்னை தொடர்ந்து எழுதத்தூண்டும் கிரியாவூக்கியாகவும் வைத்து என்னை எப்படி தொடர்ந்து எழுத உதவும் தூண்டுகோலாக உள்ளதுதெ...

காணிக்கையும் - தணிக்கையும்

படம்
நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.  - மத்தேயு 5 : 23 & 24 இவ்வசனத்தை பெரும்பாலும் நாம் அனைவருமே ஒருவிதத்தில் & ஒரேவிதத்தில் புரிந்திருப்போம், எனவே இப்பதிவின் வாயிலாக நான் அதை வேறொரு கண்ணோட்டத்தில் கொஞ்சம் அணுகிப்பார்க்கலாம் என்று நினைக்கின்றேன், படிக்கின்ற நீங்களும் இதன் முடிவில் உங்களது மேலான கருத்துக்களையும் தெரிவியுங்கள். முதலில் நாம் நினைத்திருக்கும் விதத்தை தெளிவுபடுத்தி விடுவோம், நாம் நமது காணிக்கைகளை செலுத்தப் போகும்முன்னர், நமதுபேரில் நமது சகோதரர்களுக்கோ அல்லது பிறருக்கோ நம்மைக்குறித்து ஏதேனும் குறைகளோ மனஸ்தாபமோ இருக்கும் பட்சத்தில் முதலில் அவரிடம் சென்று ஒருவருக்கொருவர் மன்னிப்புக்கேட்டு ஒப்புரவாகிவிட்டு பின்னர் நமது காணிக்கைகளை செலுத்தவேண்டும் அப்போதுதான் நமது காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொல்வதாய்த்தான் நாம் அர்த்தம் கொண்டிருப்போம். இ...

மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

படம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் காட்டிகொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைய சிலுவையில் ஒப்புக்கொடுக்கப்படப் போகும் முன்பதாகவே தனது சீஷர் சீமோன் பேதுருவிடம் "இன்றிரவு சேவல் இரண்டுமுறை கூவுவதற்கு முன்பாக நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்" என்று கூறியிருந்தார். அதேப்போலவே இயேசுவை பாடுகளுக்கு உட்படுத்தப்பட கட்டளை பெற்றுக்கொண்டு, அவரை அழைத்துக் கொண்டுபோகும் முன்னமே, சேவல் கூவுவதற்கு முன்பாகவே பேதுருவும் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ மூன்றுமுறை மறுதலித்தும்விட்டார்.  மேற்குறிப்பிட்ட சம்பவம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த சம்பவமே, ஆனாலும் இங்கு நான் அதை இன்னும் ஆழமாக ஆராய்ந்து யோசித்தபோது எனக்கு உதித்த எண்ணத்தை பகிருகிறேன், இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து மட்டுமே. பேதுரு மூன்றுமுறை மறுதலித்த விதத்தை சற்று ஆராய்ந்தால், முதல்முறை "அவரை எனக்கு தெரியாது / நான் அவரை அறியேன்" என்றார். இரண்டாவது முறை, "அவரோடு இருந்தவன் நான் அல்ல" என்றார். மூன்றாவது முறை, இன்னும் அதிகமாய் ஒருமையில் "அவனை எனக்கு தெரியாது" என்று சத்தியம் செய்யவும் சபிக்கவும்கூட செய்தார்...