நிராயுதமாய் - நீரே ஆயுதமாய்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நிராயுதபாணிகளான எங்களுக்கு நீரே ஆயுதமாய் வந்தீரே, உமக்கு கோடாக்கோடி நன்றிகள் என்று என்றைக்கேனும் நாம் அவருக்கு நன்றி சொல்லி அவரை மகிமைப் படுத்தியிருப்போமா? " உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் " என்று, பல கஷ்டங்கள், நிந்தைகள் & அவமானங்கள் பட்டுவிடுவோமோ இப்படி புருஷனை அறியாமலே பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியாகி விட்டோமே என்றெல்லாம் யோசித்துக் கலங்கிப் பின்னர் கணவனான யோசேப்பும் அதனை அறிந்து புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு குடிமதிப்பு எழுதப்போகும் வழியில் சத்திரத்தில் தங்க இடமில்லாமல் பிரசவித்து மாட்டுத் தொழுவத்தில் குழந்தையை கிடத்தி, பின்னர் எட்டாம் நாளிலே தேவாலயத்திற்கு தூக்கிவந்த குழந்தை இயேசுவை குறித்து அவரது தாயாகிய மரியாளை நோக்கி சிமியோன் தீர்க்கதரிசி இப்படி சொல்கிறார். அந்நேரத்தில் ஒரு தாயினது மனது எவ்வளவாய் கலங்கியிருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்களேன், கர்த்தர் ஆபிரகாமுக்குக் கூட ஈசாக்கை சற்றே வளர்ந்த பின்னர்தான் பலியிட வேண்டுமென கேட்டார், ஆபிரகாமுங்கூட சிறிதளவேனும் அப்போது மனம் கலங்கித்தான் போயிருப்பார்...