எனது ஜெபங்கள்-2
எனது ஜெபங்கள்-1 அதிகாலை வேளையில்: "நன்றி ஆண்டவரே இந்த நாளை தந்ததற்காய் . இரவு முழுதும் நல்ல நித்திரை வரப்பண்ணி இந்த நல்ல நாளிலும் அதிகாலை வேளையை தந்து என்னை துயில் எழுப்பிவிட்டு என்னை உமது சமூகத்தில் அமரச் செய்தீரே ஸ்தோத்திரம் . இந்த நாளிலேதானே 'காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன் , கர்த்தாவே காலையிலே என் சத்தத்தை கேட்டருளுவீர் ' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம், 'நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம் , 'நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன் ' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம் , 'அதிகாலையிலே தேவன் சகாயம் பண்ணுவார்' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம் , 'அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்கு காண்பியும்' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம், அதுபோலவே காலை யிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்குகிறதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். 'அதிகாலமே உம்மை தேடுகிறேன்' என்கிற வார்...