தாலந்து
மத்தேயு 25-ஆம் அதிகாரத்தில், ' அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது ' என்று 14-ஆம் வசனத்தில் தொடங்கி, ' பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான், என்றார் ' என்று 30-ஆம் வசனத்தில் முடிகிற, இயேசு கிறிஸ்துவால் சொல்லப்பட்ட உவமையைக் குறித்து சற்று வேறுவிதமாக ஆராயும் பதிவு இது. அந்த உவமையானது நாம் அனைவரும் அறிந்திருக்கிறவண்ணமாக, ' இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் ' என்பதாய், நாம் நம்முடைய தேவன் நமக்கென்று தந்திருக்கிற தாலந்துக்களை அவருக்கென்று அவருடைய மகிமைக்கென்று பயன்படுத்தாமல் அதனை வீணாக்கி விட்டுவிடுவோமானால் நமக்கு என்ன விளைவுகள் நேரிடும் என்பதை விளக்கும் அல்லது நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையோடு கூடிய ஒரு விழிப்புணர்வு உவமையாகும். இதனையே வேறொரு கோணத்தில் சற்று சிந்தித்தபோது புலப்பட்ட காரியங்களை இங்கே பதிவாகப் பகிர்கிறேன். தாலந்து என்பது நமக்கு த...