இடுகைகள்

தாலந்து

படம்
மத்தேயு 25-ஆம் அதிகாரத்தில், ' அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது ' என்று 14-ஆம் வசனத்தில் தொடங்கி, ' பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான், என்றார் ' என்று 30-ஆம் வசனத்தில் முடிகிற, இயேசு கிறிஸ்துவால் சொல்லப்பட்ட உவமையைக் குறித்து சற்று வேறுவிதமாக ஆராயும் பதிவு இது. அந்த உவமையானது நாம் அனைவரும் அறிந்திருக்கிறவண்ணமாக, ' இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் ' என்பதாய், நாம் நம்முடைய தேவன் நமக்கென்று தந்திருக்கிற தாலந்துக்களை அவருக்கென்று அவருடைய மகிமைக்கென்று பயன்படுத்தாமல் அதனை வீணாக்கி விட்டுவிடுவோமானால் நமக்கு என்ன விளைவுகள் நேரிடும் என்பதை விளக்கும் அல்லது நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையோடு கூடிய ஒரு விழிப்புணர்வு உவமையாகும். இதனையே வேறொரு கோணத்தில் சற்று சிந்தித்தபோது புலப்பட்ட காரியங்களை இங்கே பதிவாகப் பகிர்கிறேன். தாலந்து என்பது நமக்கு த...

உலக இரத்ததான தினம் (ஜூன் 14)

படம்
இன்று ஜூன் 14-ஆம் தேதி, இந்நாளை ' உலக இரத்ததான தினமாக ' கொண்டாடுவர். இரத்த வகைகளைக் கண்டுபிடித்த கார்ல் லாண்ட்ஸ்டைனரது ( Karl Landsteiner ) பிறந்தநாள் இன்று, ஆகவே அவரையும் அவரது கண்டுபிடிப்பையும் நினைவுகூர இந்நாளானது கொண்டாடப்படுகிறது. இத்தகவலுக்கும் இப்பதிவிற்கும் ஏன் இந்த வலைப்பூவிற்குமே துளியும் சம்பந்தமே இல்லையே, பின்னர் ஏன் நானிங்கே அதனை பதிவிடவேண்டும், நீங்களும் ஏன் படிக்கவேண்டும்? சொல்கிறேன், துளியும் சம்பந்தமே இல்லை என்று சொல்லிவிட முடியாது,  ஏனென்றால் நான் இங்கு சொல்லப்போவதே அந்த துளிகளைப் பற்றித்தான். ஆம், நமக்காக சிந்தப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத் துளிகளைப் பற்றித்தான். ஏனென்றால் இந்த மொத்த உலகத்திற்கே முதன்முதலில்  இரத்ததானத்தை கற்றுத் தந்தவர் இ வர்தானே. 'ஒருவரது இரத்தமானது, மற்றவருக்கும் பயன்படும்' என்கிற அடிப்படையே இவரிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம்தானே. அப்படிப்பட்டவரை நாம் இந்நாளிலும்கூட  நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும், உலகமானது கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை, அவரது இரத்தத்தாலே மீட்கப்பட்ட நாமாவது கொண்டாட வேண்டும்...

எதுவரை ? | சங்கீதம் 13 பாடல்

படம்
சங்கீதம் 13-ஆம் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு, நான் இயற்றிய ஒரு பாடல், சகோதரி.கிரேசி விக்டர் அவர்களது அழகிய குரலில் சகோதரர்.ஜோஷ்வா விக்டர் அவரது மனமயக்கும் இசையில்... எதுவரை எதுவரை எனை மறப்பீர்?  எதுவரை எதுவரை உமை மறைப்பீர்?  எதுவரை என்னில் நான் மனமடிவேன்?  எதுவரை சத்துரு எனை எதிர்ப்பான்?    1. கர்த்தாவே எனை நோக்கிப்பார்த்து       மன்றாட்டில் செவிசாயுமையா       நித்திரை அதை தூரம் நீக்கி      கண்களைத் தெளிவாக்குமையா..    2. அவனை நான் மேற்கொண்டேனென்று      பகைவர்கள் களிகூரா வண்ணம்,       என் கால்கள் தள்ளாடும்போது       உம் கரத்தால் எனைத் தாங்கிக்கொண்டீர்..