எதுவரை ? | சங்கீதம் 13 பாடல்
சங்கீதம் 13-ஆம் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு, நான் இயற்றிய ஒரு பாடல், சகோதரி.கிரேசி விக்டர் அவர்களது அழகிய குரலில் சகோதரர்.ஜோஷ்வா விக்டர் அவரது மனமயக்கும் இசையில்...
எதுவரை எதுவரை எனை மறப்பீர்?
எதுவரை எதுவரை உமை மறைப்பீர்?
எதுவரை என்னில் நான் மனமடிவேன்?
எதுவரை சத்துரு எனை எதிர்ப்பான்?
1. கர்த்தாவே எனை நோக்கிப்பார்த்து
மன்றாட்டில் செவிசாயுமையா
நித்திரை அதை தூரம் நீக்கி
கண்களைத் தெளிவாக்குமையா..
2. அவனை நான் மேற்கொண்டேனென்று
பகைவர்கள் களிகூரா வண்ணம்,
என் கால்கள் தள்ளாடும்போது
உம் கரத்தால் எனைத் தாங்கிக்கொண்டீர்..
கருத்துகள்
கருத்துரையிடுக