நோக்கமொன்றே நோக்கமென்று
'என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல' என்றவரே, நான் என்னைக் குறித்து என் விருப்பப்படி நினைப்பதன் மூலமாக, என் நினைவுகளாலுங்கூட, உம்மை ஒருபோதும் வேதனைப் படுத்திவிடக் கூடாது. முழுவதும் உமது சித்தப்படியே நீர் எனக்கு செய்ய நினைத்த அனைத்தையுமே, என் வாழ்வில் நீர் செய்துமுடிக்க வேண்டும் என்கிற இந்நினைவே எப்பொழுதும் என்னைக்குறித்த நினைவாக நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரேயொரு நினைவாகும்.
நான் என் வாலிபப்பிராயத்திலே என் சிருஷ்டிகராகிய உம்மை சமயங்களில் நினைத்திருக்க மாட்டாமல் போயிருந்திருக்கலாம், என்னையும் மன்னித்தீர். நான் சிறுமையும் எளிமையுமானவன்தான், ஆனால் கர்த்தராகிய நீரோ என்மேல் எப்பொழுதும் நினைவாயிருக்கிறீர் இருந்திருக்கிறீர் இனியும் இருப்பீர். எனவே உம்மிடம் மாத்திரமே என்னை ஒப்படைத்தும், முழுவதும் உம்முடைய சித்தத்திற்கே ஒப்புவித்தும் இருக்கின்றேன் கர்த்தாவே.!

கருத்துகள்
கருத்துரையிடுக